------நம் இனத்தின் ஆரம்பம்-------

                                                நம் இனம் சேர சோழ பாண்டிய மரபினர்.இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் தமிழகம் முழுவதும் இருந்து வந்தோம்.நம்மில் சிலர் அரசர்களாகவும் ,நிலைமைக்காரர் ஆகவும் ,வியாபாரிகளாகவும் இருந்து வந்துள்ளனர் .எல்லா ஊர்களிலும் சான்றோரை போல இருந்து வந்தனர் (அதாவது நல்லது கெட்டதை தீர்த்து வைக்கும் நாட்டாமைகள்).சான்றோன் தான் பின்னாளில் சானார் என்று திரிந்து வந்துள்ளது.பழம் இருக்கும் இடம் தேடி அணில் வரும் ,அது போல வியாபாரம் நம்மிடம் செய்ய நாயகர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்தனர்.வியாபாரம் செய்ய வந்தவன் நம்மை அடிமை ஆக்கினார்கள்.நாம் விரட்ட பட்டோம்.நம் இன பெண்கள் மேலாடை போட தடை வந்தது,எட்டு அடி தூரம் நின்று தான் பேச வேண்டுமென நாடார்களை ஒதுகினர்கள் அந்தணரும் நாயகரும்.கொற்கை என்னும் நகருக்கு அனைவரும் அடித்து விரட்ட பட்டோம்.கொற்கை பாலை நிலம் சார்ந்தது .அங்கே பனை மரம் மட்டும் தான் வளரும்.பசி நமக்கு மரம் ஏற கற்று கொடுத்தது.இப்போதும் பனையேறி,ரெண்டாம் நம்பர் என்று நமக்குள்ளே பேசி கொள்கிறோம்.ஆதியில் அனைவரும் பனை ஏறியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பனை ஏற முடியாதோர் வியாபாரம் செய்தார்கள்.
நாடார்களின் ஏழாம் அறிவு கஷ்டங்கள் பல வாட்டி வதைத்தது.அனைவரும் கூடி பேசினார்கள் .அந்த கூடிய பேசியது தான் உறவின்முறை ஆனது.நமக்கென்று கோவில் இல்லை,நாம் ஊர் கிணத்தில் தண்ணீர் எடுக்க கூடாது ? நம் இன மாணவர்கள் பள்ளி செல்ல கூடாது..நாமே முயற்சி செய்வோம்.நமக்கென்று ஒரு கோவில்,நமக்கென்று  கோவில் அருகே ஒரு கிணறு,ஒரு பள்ளிக்கூடம்.இந்த இலட்சியத்தை மனதில் கொண்டார்கள்....பணம்?அப்போது தான் மகமை என்ற புது விஷயம் தோன்றியது.தலைக்கட்டு வரி மட்டும் அறிந்து வந்த மற்ற இனத்திற்கு மகமை புதியது?வியாபாரிகள் ,வேலை செய்வோர்,தான் சம்பாத்தியத்தில் ஒரு சதவீதம் வரியை கட்ட வேண்டும்.அது பள்ளி கட்ட,கிணறு தோண்ட ,கோவில் நிறுவ உபயோக படும் .பணம் சேர்ந்தது பள்ளி உருவானது?நம் இன பள்ளியில் வேற்று மாணவர்கள் பலர் படிக்க தொடங்கினார்கள் .
வீட்டுக்கு ஒரு பிடி அரிசி வீதமும் தினமும் சேர்த்து வைப்பார்கள் நாடர்கள் .அந்த பிடி அரிசி நாடே பஞ்சம் வந்திருக்கும் நேரம் உதவியது.

SOUTHNADARBOYS

No comments:

Post a Comment

Instagram